தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
சேலம் மாவட்டம், ஒமலூரை அடுத்த கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் ஈசன் வயது-48,. இவர் உள்ளூரில் டெய்லராக இருந்து கடை வைத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள ஆலமரத்து பட்டியை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி ராணி. கணபதி கடந்த எட்டு ஆண்டிற்கு முன்னர் இறந்து விட்டார். ஆலமரத்து பட்டியிலிருந்து துணி தைக்க கொங்கரப்பட்டிக்கு அடிக்கடி வந்து போன ராணிக்கும், டைலர் கடை வைத்திருக்கும் ஈசனுக்கும் “கூடா நட்பு” ஆரம்பமாகியுள்ளது.
நாளடைவில், ராணி ஈசன் கடைக்கு போவது, ஈசன் ராணியின் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்துள்ளனர். இருவரும் கடந்த ஏழு ஆண்டிற்கு மேலாக இந்த நட்பு தொடர்ந்துள்ளது.
அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது பெங்களூருவில் கூலி வேலை பார்க்கும் ராணி மகன் அனுமந்தன் வயது-25, திடீரென்று தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். தன்னுடைய தாயுடன், மற்றொரு நபர் கள்ளத்தொடர்பு வைத்தது மகனுக்கு தெரிய வந்தது.
கள்ளகாதலியின் மகன் முன்னால் நின்று கொண்டிருந்த ஈசன் ஒன்றும் சொல்லாமல் ராணியின் வீட்டை விட்டு வெளியேறினார். ஆத்திரமடைந்த அனுமந்தன் தன்னுடைய தயார் ராணியை இழுத்துப்போட்டு நாலு உதை கொடுத்துவிட்டு வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்துகொண்டு ஈசன் சென்றவழியில் சென்றுள்ளார். ஈசனை பின்தொடர்ந்து சென்று பூபாலன் கொட்டாய் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புளியமரத்து அடியில் வைத்து ஈசனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு தப்பி சென்று விட்டார்.
ஈசன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பொம்மிடி போலிஸ் இன்ஸ்பெக்டர் சொருப ஞானபிரகாசம் நிகழ்விடம் சென்று ஈசனின் பிணத்தை கைப்பற்றி விசாரனை நடத்தினார். ஈசனை கொலை செய்துவிட்டு தலைமறைவான அனுமந்தனை இப்போது தேடி வருகின்றனர்.