நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே நடந்தது. அனன்யாவை அபுசலீம் தள்ளி விடுவது போன்ற காட்சியை எடுத்தனர். அப்போது அனன்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. கை மணிக்கட்டிலும் முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்தார்.
உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து கை முறிந்ததை உறுதிப்படுத்தினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.