ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
இன்ப சுற்றுலா சென்ற காதல் ஜோடி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் காதலன் கண்ணெதிரே காதலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் நெலமங்களாவை சேர்ந்தவர் ரூபா ( 21). கொப்பல் பகுதியை சேர்ந்தவர் மவுனேஷ் (22). இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் இன்ப சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
அப்போது ரூபாவுக்கும், மவுனேசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரூபா திடீரென ஆற்றில் குதித்தார். உடனே மவுனேஷ் பதற்றத்தில் கதறி கூச்சல் போட்டார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ரூபாவை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ரூபா ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக செத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மவுனேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து சிமோகா கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு செய்து, மவுனேசை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.