இலங்கை பயணம் திருப்தி: சொல்கிறார் சுஷ்மா
இலங்கைக்கு சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை நிலவரம் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கினார். இந்த சந்திப்பு பற்றி சுஷ்மா சுவராஜ் செவ்வாய் அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கைக்கு சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது. இலங்கையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினோம். தமிழர்களின் மறுகுடியமர்த்தல் பகுதிகளையும் பார்வையிட்டோம். தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களையும் சந்தித்தோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.