மறையும் மரபுகள் காப்பாற்றப்படுமா?
அம்மி மிதித்து அதிருந்த்தி பார்த்து பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை மணமகனுக்கு கைபிடித்துக் கொடுப்பார்கள்.
ஆயிரம் காலத்துப்பயிரான திருமணபந்த்த்தில் தவிர்க்க முடியாது இன்றியமையாத பொருளாக்க் கருதப்படுவது அம்மி. சீப்பைக் கூட ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நிற்காது. ஆனால் திருமணத்தின் போது அம்மிக்கல்லை தயாராக வைத்துக்கொள்வது தமிழர்களின் மரபு அது இல்லை என்றால் மனம் கலங்குவர்.
திருமணம் மட்டுமல்லாமல் வாய்க்கு ருசியான சட்னி துவையல் என தயாரிக்கவும், நாவில் நீரை ஊறவுக்கும் சுக்கா வறுவலுக்கான மசால் அரைக்கவும் அம்மியின் ருசியும் மணமும் ஆளைததூக்கும்.
இப்படி தமிழர்கரின் ஊண் உணவு மரபுகளில் ஒன்றிப் போன அம்மியும், குளவியும் தயாரிப்புகள் அண்மைக்காலமாக மங்கிக்கொண்டே வருகின்றன.
அம்மி குளவி ஆட்டுக்கல் என மலை முகடுகளிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட பாறைகள் மூலம் தயாரிக்கும் பணியை ஜீவனமாகக் கொண்ட உளியடித்துப் பிழைக்கும் குடும்பங்கள் நெல்லை மாவட்டத்தில் நூற்றுக் கணக்கில் இருந்தனர் தற்போது அந்தக்குடும்பங்கள் விரல் விட்டு எண்ணுமளவுக்குச் சுருங்கிப் போனதற்கு காரணம் அரசின் கொள்கையும் மலையைக் குடைந்து பாறைகளை வெட்டி எடுக்கும் மலைக்கள்வர்களும் தான் என வற்றிப் போன குரலோடு செல்லும். பாக்யராஜம், மாரிச்சாமியும்,
தற்போது மிக்சியும் கிரைண்டரும் தாரள இலவசமாக வீடு தேடி வந்து விட்டது. அவைகளையும் மீறி அம்மி குளவிக்கான ஆர்டர் கிடைத்தால் தயார் செய்வற்கான கற்களைக் கொண்டுவர லஞ்சத்தோடு ரூ 700 காலியாகிவிடுகிறது இவ்வளவு அடக்கவிலையோடு தயாரிப்புச் செலவு சேர்த்து தயார் செய்தாலும் கொள்வாரில்லை. இதனால் தொழிலும் நசிந்து எங்களின் குடும்பங்கள் மாற்றுவேலைகளுக்கு சென்று விட்டன.
பரம்பரையான இந்த உளியடிக்கும் குடும்பத்தொழிலை தவிரவேறு தொழில் அறியாத எங்களின் குடும்பங்கலைக் கவனிப்பாரில்லை. அரசின் பார்வை தான் எங்கள் மீது பதிய வேண்டும் என்கிறார்கள் குமுறியபடி
படங்கள்: ராம்குமார்