காரில் இருந்த 50 சவரன் நகை கொள்ளை
விழுப்புரத்தில் கார் கண்ணாடியை உடைத்து 50 சவரன் நகையைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர் முரளிநரசிம்மன். இவர் கோவையில் நகைப் பட்டறை வைத்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, விழுப்புரம் அருகே இவரது கார் பழுதானது. இதனால் பழுது பார்க்க கார் பழுதுபார்க்கும் இடத்தில் கொடுத்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் கார் கண்ணாடியை உடைத்து, அவரது காரில் வைத்திருந்த 50 சவரன் நகையைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.