தர வரிசை: சானியாவுக்கு 181வது இடம்
உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா, செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா, போலந்து வீராங்கனை ராட்வான்ஸ்கா, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர் ஆகியோர் 2 முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர்.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6 வது இடத்தில் தொடருகிறார். இந்திய வீராங்கனை சானியா மிர்சா 184 வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 181 வது இடத்தை பிடித்துள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா 9 வது இடத்தில் 8 வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2 வது இடத்திலும், சுவிர்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3 வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 4 வது இடத்திலும், பிரான்ஸ் வீரர் சோங்கா 5 வது இடத்திலும் தொடருகின்றனர்.
இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஒரு இடம் முன்னேறி 197 வது இடம் பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் லியாண்டர் பெயஸ் 7 வது இடமும், ரோகன் போபண்ணா 10 வது இடமும், மகேஷ்பூபதி 15 வது இடமும் வகிக்கின்றனர்.