யாருக்கும் நான் அஞ்சமாட்டேன்: மம்தா
மக்களின் மேம்பாட்டினை உயர்த்துவதே எனது லட்சியம் அதுவரை யாருக்கும் நான் அஞ்சமாட்டேன், எனது ஆட்சி குறித்து தவறான பொய்பிரச்சாரம் செய்கிறார்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்குவங்கத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: சில ஊடகங்கள் எனது ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றன. அதற்கு நான் அச்சப்பட மாட்டேன். கம்யூனிஸ்டுகளை போல் நான் பதவி வெறிபிடித்தவள் அல்ல.
இதற்கு முன்பு கம்யூனிஸ்டுகள் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து சாதிக்காதவற்றை நான் ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் செய்துள்ளேன். 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தனியார் துறை வாயிலாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனது ஆட்சி பற்றி பொய்ப்பிரச்சாரம் என்னை ஒன்றும் செய்ய முடியாது. யாருக்கும் நான் அஞ்சமாட்டேன். யாரைப்பற்றியும் எனக்கு கவலையில்லை என்றார்.