<a href='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' xhref='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE'target='_blank'><img src='http://adex.adchakra.net/adex/www/delivery/avw.php?zoneid=501&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=aae31074&ct0=INSERT_CLICKURL_HERE'border='0' alt='' /></a>உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல், ஒரு கண்ணாடி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது எனக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்து தர்ம சக்தி அமைப்பு சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ’ஒரு கல், ஒரு கண்ணாடி' படத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் உள்ளன.
மனுவை, நீதிபதி வி.கே.சர்மா விசாரித்தார். சென்சார் போர்டு சார்பில், வழக்கறிஞர் ஜி.ரவிகுமார், "படத்தை முழுமையாக பார்க்காமல், டெய்லரை பார்த்து விமர்சிப்பது சரியல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதால், மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சர்மா உத்தரவிட்டார்.