டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
இந்திய எம்.பிக்களுக்கும், இங்கிலாந்து எம்.பிக்களுக்கும் நடந்த நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் எம்.பி.யுமான முகமது அசாருதீன் கூறியதாவது: கேப்டன் டோனி சர்வதேச ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் எப்போதும் ஒரு சிறந்த கேப்டன் ஆனால் டெஸ்ட் போட்டியில் இல்லை. அதில் அவருக்கு அவ்வளவு திறமை இல்லை.ஒருவேளை ஆட்ட களத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாததால் இருக்கலாம்.உண்மையில் சொல்லப்போனால் 3 போட்டிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் அவர் ஒரு சிறந்த வீரர். ஒரு வேளை அவருக்கு கேப்டன் பதவி அழுத்தம் கொடுக்கலாம்.அவர் வித்தியாசமாக விளையாட கூடியவர்.இவ்வாறு அவர் கூறினார்.