காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
var zflag_nid="1185"; var zflag_cid="768/186"; var zflag_sid="209"; var zflag_width="1"; var zflag_height="1"; var zflag_sz="94"; lign=justify>காவிரி நடுவர் மன்ற தலைவராக இருந்து வந்தவர் நீதிபதி என்.பி.சிங். 80 வயதான சிங் கடந்த 16 ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்தார்.
இவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து மத்திய நீர்ப்பாசன துறைக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக தெரிவித்து உள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. முதலில் நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி தலைமை பதவியில் இருந்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இப்பதவிக்கு நீதிபதி என்.பி.சிங் நியமிக்கப்பட்டார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்யை எதிர்த்து கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. இதன்காரணமாக நடுவர் மன்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மறுஆய்வு மனுக்களும் நடுவர் மன்ற உள்ளன. இதற்கிடையே தமிழக அரசு தொடர்ந்து உள்ள வழக்கு மீதான விசாரணை வருகிற 17-ந் தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில் என்.பி.சிங் ராஜினாமா செய்துள்ளதால் விசாரணை தள்ளிவைக்கப்படும் என்று தெரிகிறது.
நதிநீர் தாவா தொடர்பான நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு, பணியில் இருக்கக்கூடிய ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. காவிரி நடுவர் மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தலைவர் பதவிக்கு விரைவில் நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.