வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
சென்னையில் பிளஸ்-2 மாணவி ஒருவர் வயிற்றில் 5 மாத குழந்தையுடன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து போராடி, இறுதியில் வெற்றி பெற்று தனது காதலரை மணந்தார்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் கணேஷ் (20). இவர் சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படிக்கிறார். இவர் மீது சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜமுனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ‘’பள்ளியில் கணேசும், நானும் ஒன்றாக படித்தோம். இருவரும் உயிருக்கு, உயிராக காதலித்தோம். காதலில் சிக்கிய நான் சரியாக படிக்காததால் பெயிலாகிவிட்டேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கோவில் ஒன்றில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம்.
கணேஷ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவ்வாறு வரும்போது, நானும், அவரும் ரகசியமாக சந்தித்து உறவு கொள்வோம்.
அதன் விளைவாக நான் கர்ப்பம் அடைந்தேன்.
இப்போது எனது வயிற்றில் 5 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணேசை ஊரறிய என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டால், அவர் மறுக்கிறார்.
அவரது தந்தை வருமானவரித்துறையில் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு 2 அண்ணன்கள் இருக் கிறார்கள்.
அவர்கள் திருமணம் முடிந்தபிறகே ஊரறிய நமது திருமணம் நடக்கும் என்று சொல்கிறார். அதுவரை நான் காத்திருக்க முடியாது. இதுதொடர்பாக அவரை அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த புகார் மனு தொடர்பாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஜமுனாவை காதலித்தது, உறவு வைத்தது அனைத்தையும், கணேஷ் ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் ஊரறிய திருமணத்துக்கு மறுத்தார்.
தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் அவர் திருமணத்துக்கு சம்மதித்தார்.
நேற்று மாலை 6 மணி அளவில் வடபழனி முருகன் கோவிலில் வைத்து, அவர்கள் திருமணம் இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.