சசிகலா வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும், இளவரசியும் நேரில் ஆஜராயினர். சுதாகரன் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் ஆவணங்களை வழங்கக் கோரி சசிகலா தாக்கல் செய்துள்ள மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 18 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.