அரியானா மாநிலத்தின் விளையாட்டு தூதராக பெயஸ் நியமனம்
அரியானா மாநிலத்தின் விளையாட்டு தூதராக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த மாநில முதல் மந்திரி பூபிந்தர்சிங் ஹூடாவுடனான சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு வெளியிடப்பட்டது. இதன்படி அரியானா மாநில இளைஞர்களை ஊக்குவிப்பதுடன், அங்கு விளையாட்டு மேம்பாட்டுக்கும் பெயஸ் உதவிகரமாக இருப்பார்.