கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெகநாதன் (4) பிரபல ரவுடி. இவன் மீது பல வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக ஜெகன் இன்று காலை சத்துவாச்சாரி கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டு முன் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து 4 பேர் இறங்கினர். அவர்களது கையில் கத்தி, மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்தது. அவர்களை பார்த்ததும் ஜெகன் அங்கு இருந்து தப்பி ஓட முற்சித்தார். அப்போது கும்பல் அவரை விரட்டியது அவரை ஓட, ஓட கத்தியால் சராமாரியாக வெட்டினர். கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக கோர்ட்டில் உள்ள ஒரு அறையில் தஞ்சம் புகுந்தார். அங்கும் கும்பல் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. அறை முழுவதும் ரத்தம் சிதறியது. இதை பார்த்து கோட்டுக்கு வந்த வக்கீல்கள், பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அந்த கும்பல் அங்கிருந்த சர்வ சாதாரணமாக நடந்து சென்று தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் சத்துவாச்சாரி போலீஸ்இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கும்பல் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்த ஜெகன் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தையொட்டி கோர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு வக்கீல்கள் கண்டனம் தெரிவித்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.