அண்மைச் செய்திகள்
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || இலங்கை தம்பதிகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (18:14 IST)



மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்





மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன் உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் என்.வரதராஜன்


மருத்துவமனையில் இன்று (10.04.2012) மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 81. அவருக்கு ஜெககுரு என்ற மனைவியும், கல்யாணசுந்தரம், பாரதி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கல்யாண சுந்தரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர செயலாளராக உள்ளார். பாரதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
 
என்.வரதராஜன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள பாளையம் அருகே இருக்கும் கம்பிளியம்பட்டியில் 1928ல் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே திண்டுக்கல்லில் உள்ள சவுந்தராஜா மில்லில் தொழிலாளியாக பணியாற்றினார்.
 
1944ல் தொழிற்சங்கத்தில் இணைந்த அவர், 1947ல் நகர செயலாளராகவும், 1953ல் மாவட்ட குழு உறுப்பினராகவும், 1954ல் மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சிலராகவும், 1955ல் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினராகவும், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளராகவும், 1967ல் வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், 1977 மற்றும் 1981ல் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏவாகவும், 1978 முதல் 1981 வரை கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராகவும், 1994ல் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.


2004ல் கோவையில் நடந்த கட்சியின் மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2005 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலச் செயலாளராக பதவி வகித்தார்.


தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர் கட்சியிடம் கேட்டுக்கொண்டு, பதவியில் இருந்து விலகினார். 


கடந்த திமுக ஆட்சியில் அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பேரணி, போராட்டங்கள் நடத்தி அவர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கிக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


என்.வரதராஜனுக்கு சொந்தமான வீடு கிடையாது. சென்னையில் இருக்கும்போது அவர் கட்சி அலுவலகத்திலேயே தங்குவார். திண்டுக்கல் செல்லும்போதும் அவர் கட்சி அலுவலகத்திலேயேதான் தங்குவார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 09.04.2012 அன்று நிறைவு அடைந்தது. இந்த மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜன், இன்று (10.04.2012) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

என்.வரதராஜனின் உடல் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
 
பின்னர் என்.வரதராஜன் உடல் திண்டுக்கல் கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்ககாக வைக்கப்படுகிறது. நாளை (11.04.2012) மாலை 3 மணிக்கு உடல் தகனம் நடக்கிறது.

சக்திவேல்


   





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : amayadi mahesh Country : India Date :4/11/2012 11:20:38 AM
மக்கள் தலைவருக்கு இதய அஞ்சலி
Name : ஆனந்த் Date :4/11/2012 3:31:54 AM
உண்மையான தலைவருக்கு என் இதைய அஞ்சலி
Name : எ.சிங்காரவேலன் சானூரபட்டிதஞ்சாவூர் Country : Australia Date :4/10/2012 3:42:53 PM
மக்கள் தலைவருக்கு இதய அஞ்சலி