அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012
ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
......................................
உண்ணாவிரதம் இருப்பேன்: குமாரசாமி
......................................
பொன்னமராவதி: நாடுசெலுத்துதல் திருவிழா (படங்கள்)
......................................
ஊழலை ஒழிக்கக்கோரி நேபாளத்தில் பந்த்
......................................
முப்படைத் தளபதிகளும் ஆஜராக உத்தரவு: பாராளுமன்ற நிலைக் குழு உத்தரவு
......................................
இளைஞர் காங். பிரமுகர் படுகொலை
......................................
10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் விபத்தில் மரணம்! உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானம்!
......................................
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல! மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை! (படங்கள்)
......................................
சொத்துக் குவிப்பு வழக்கு: சசி மேல்முறையீடு
......................................
லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!
......................................
இன்னும் குணமடையவில்லை: டெண்டுல்கர்
......................................
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
......................................
கே.ஜே. யேசுதாசுக்கு சட்டசபையில் கவுரவம்
......................................
“நாங்க என்ன அழகு? ஆத்தா நீயே அழகு..!” “ஆத்தாத்தா.. பெரியாத்தா.. அம்பது புள்ள பெத்தாத்தா..!” (படங்கள்
......................................
தமிழகத்தில் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனை (12 ஆய்வக பட்டியல்)
......................................
சென்னையில் 3.6 கிலோ தங்கம் பறிமுதல்
......................................
யுவராஜிற்கு டுவிட்டரில் சச்சின் வாழ்த்து
......................................
மா.கம்யூ., கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு!
......................................
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
......................................
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
......................................
அதிமுக எம்.எல்.ஏ. சொன்ன கதைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
......................................
வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்
......................................
தேவாலயம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
......................................
23 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு
......................................
தமிழக சட்டசபைக்குள் செல்போனுக்கு தடை
......................................
மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்
......................................
இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ; நயன்தாரா
......................................
ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
......................................
கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி
......................................
விடுதலைப் புலிகள் இயக்கம் அழியவில்லை: இலங்கை அமைச்சர்
......................................
சரத் பொன்சேகாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார் இலங்கை முன்னாள் நீதிபதி
......................................
டெல்லி திரும்பினார் யுவராஜ்சிங் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
......................................
உளுந்தூர்பேட்டை : பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி
......................................
3,000 ஆண்டுகள் ஆனாலும் பிரபாகரன் புகழ் அழியாது : சிங்களத்தலைவர் பாராட்டு
......................................
13 வயது மாணவியை கற்பமாக்கிய 52 வயது தொழிலாளி தலை மறைவு
......................................
டிரைவிங் சொல்லித்தரும் போது பெண்ணிடம் சில்மிஷம் :மாஸ்டருக்கு நடு ரோட்டில் தருமஅடி
......................................
பள்ளி மாணவியிடம் காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவருக்கு அடி உதை
......................................
எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
......................................
உதயகுமாருக்கு பாமக கண்டனம்
......................................
தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
......................................
தூத்துக்குடி :கயத்தாறில் 29 பேர் கைது:144 தடை உத்தரவு
......................................
போலீஸ் அதிகாரியின் காரை உரசியபடி சென்ற நடிகை கைது
......................................
காப்பி அடிக்க அனுமதிக்காத ஆசிரியர் கொலை
......................................
குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
......................................
தமிழக முதல்வர் படம் கிழிப்பு : 5 பேரை தேடும் போலீசார்
......................................
ராஜபக்சே உருவமொம்மையை தெருத்தெருவாக இழுத்து வந்து மறியல்
......................................
தெரு நாயின் காலை உடைத்தவன் கைது
......................................
வாய்கிழிந்த மலைப்பாம்புக்கு தொடர் சிகிச்சை
......................................
வைகோவும், சீமானும் காகிதப் புலிகள் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
......................................
தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம்
......................................
சர்தாரியின் இந்திய வருகை - சீனா கருத்து
......................................
நிலச்சரிவு: சுரங்கத்தில் 9 பேர் சிக்கி தவிப்பு
......................................
ஐதராபாத் - ஊரடங்கு உத்தரவு
......................................
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
......................................
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? : கலைஞர் கேள்வி
......................................
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்
......................................
புலித்தோல் கடத்திய மதபோதகர் ( படம் )
......................................
''தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது!'' அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு!
......................................
சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012 (22:18 IST)



ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல!
மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை!






சென்னை மெரினா கடற்கரையில் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்ற உண்மையை ஆதாரங்களுடன் தமிழர்களுக்கும். பிற மொழி இனத்தவர்களுக்கும் தமிழர் பண்பாட்டு நடுவம் எடுத்துச் சென்றது

இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு
நன்றி சொன்னதுடன் புகை படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது போல் முயற்சியை அனைத்து நகரங்களிலும் செய்ய தோழர்கள் முன் வர வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக்கொண்டது.


குஜராத் உயர் நீதி மன்ற தீர்ப்பு விவரம்:


இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.
இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.


குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல்
செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.


இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர; அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.


   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(16)
Name : இளவேந்தன் Country : India Date :4/13/2012 12:19:01 AM
கருத்துக்களை ஆதாரப் பூர்வமாக பதிவு செய்த நடராஜன் தோழருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார். தரணி ஆண்ட தமிழன் தன் மொழியை ஆட்சி மொழியாக்காமல் விட்டுவிட மாட்டான் என்பதற்கு இதுவே சான்று.
Name : sharmilagopu Country : Australia Date :4/10/2012 6:53:59 PM
ஹிந்தி யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் தேசிய மொழி என்று சொல்லி அழுத்தம் கொடுக்காதீர்கள். பிற மொழிகள் வாழ ஏதுவாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
Name : kedigopal Country : United Arab Emirates Date :4/10/2012 1:42:36 PM
குறைந்தபட்சம் தமிழை ஆட்சி மொளியகவவது ஆக்க வேண்டும்.
Name : பாஞ்சை வேந்தன் Date :4/10/2012 1:00:57 PM
நடராசன் அவர்களின் புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டு தமிழை வளருங்கள் நண்பர்களே....
Name : skr Country : India Date :4/10/2012 10:51:46 AM
நம் நாட்டு முன்னேற்றத்துக்கு முக்கியமான செய்தி..... தமிழனின் புத்தி ஏன் இப்படி கீழ்த்தரமாக இருக்கிறது. இந்த உலகத்தில் மொழியை சொல்லி பிரச்சினை செய்யும் ஒரே இனம் இந்த தமிழ் இனம் தான். அதனால் தான் இலங்கையில் இவர்களை ஒழித்து கட்டினார்கள். எங்கே போனாலும் இந்த சனியன்களால் பிரச்சினை தான்.தமிழ் தமிழ் என்று வெறி பிடித்து அலையும் ஜென்மங்களை இந்தியாவில் இருந்தும் ஒழித்து கட்டினால் தான் நம் நாடு முன்னேறும்.
Name : Natarajan Country : Australia Date :4/10/2012 8:26:35 AM
தொடர்ச்சி -- தமிழ் நாட்டில் மற்ற மொழிக் கல்விக்கு எதிர்ப்பு இல்லை. ஆதரவு உண்டு. பள்ளிக் கல்வித் திட்டம் கூட மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது வழியாக கற்பிக்கப் படுகிறது. தமிழ் கட்டாயப் பாடம் என்பது கூட இப்பொழுது தான் கொண்டு வரப் பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பல வருடங்கள் முன்பே மாநில மொழி கட்டாயப் பாடம். தமிழ் நாட்டில் மட்டுமே தமிழே படிக்காமல் முதுகலைப் பட்டம் வாங்கலாம். வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. -- இரு மொழித் திட்டம் இந்தி பேசும் மாநிலங்களில் உண்டு.இந்தியும் ஆங்கிலமும் கற்றால் போதும் . ஆனால் தமிழ் நாட்டில் தமிழும் ஆங்கிலமும் கற்றால் போதும் என்றால் கூக்குரலிடுகின்றனர். மற்ற மொழிகள் கற்க தமிழ் நாட்டில் தடை ஏதும் இல்லை. இந்தியை மிகத் தீவிரமாகத் திணித்திருந்தால் இந்தியாவின் ஒருமைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும். இந்தியா ஒருமைப் பாடுடன் இருக்க மொழி வழி மாநிலங்கள் வழி செய்துள்ளன.ஒருவருக்கு தாய் மொழி தான் அடையாளம்.என்ன தான் பல மொழி கற்றாலும் மொழி அடையாளம் தேவை. ஜேர்மன் அரசு தமிழர்கள் கட்டாயமாக தமிழ் கற்க வேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளது.அவர்கள் அக்கறை நமக்கு இல்லையே.
Name : Natarajan Country : Australia Date :4/10/2012 8:12:29 AM
தொடர்ச்சி--அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் ஆனவுடன் கொண்டு வந்த சட்டங்கள்ஒன்று . மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று மாற்றியது. இரண்டு சுய மரியாதை திருமணம் சட்டப் படி செல்லும் என்று. அதாவது திருமணத்துக்கு வைதீக மந்திரம் ஒன்றும் தேவை இல்லை என்று. மூன்று. இரு மொழித் திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத் திட்டத்தில் கொண்டு வந்தது.மாணவர்களின் கல்வி பாரம் குறைந்தது. இந்தி படித்தால் வேலை வாய்ப்பு அதிகம் என்று கூறுவார்கள். இந்தி படிக்காததினால் தமிழ்நாடு ஒன்றும் பின் தங்கி விடவில்லை.வேலை இல்லா திண்டாட்டம் இந்தி பேசும் மாநிலங்களில் தான் அதிகம். அங்கும் ஆங்கில வழிக் கல்விக்குத் தான் மோகம்.இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆங்கிலம் கோலோச்சும்.இளைய தலை முறை ஆங்கிலத்தையே விரும்புகிறது. மாநில மொழிகள் பேச்சு மொழியாக இருக்கும். பல இந்திய மொழிகள் காப்பற்றப் பட்டதற்கு மற்ற மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் எஸ் கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடிய பாட்டு -- முதல் முறையாக நல்லவை யாவும் முயன்று முடிக்கும் தமிழ்நாடு -- எழுச்சி, உணர்ச்சி உள்ள மாநிலம் தமிழ் நாடு.( தொடர்கிறது மேலே )
Name : Muthu Country : United States Date :4/10/2012 7:55:42 AM
Hindi is NOT NATIONAL LANGUAGE. This is the fact. Every one who has other language as their mother tongue should know this. Another thing Sanskrit is not the mother of any of the Indian language. There is a false goyaplse propaganda is going on for a long time in India. In fact the Sanskrit has come from the old Iranian language. It has never been spoken in India. Used by nammavaa for their benefits.
Name : Natarajan Country : Australia Date :4/10/2012 7:54:26 AM
தொடர்ச்சி மூன்றாம் பகுதி -- தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாகத் தான். இன்றும் ஆங்கிலம் இந்தியாவில் தொடர்கிறது. தமிழ் நடத்திய போராட்டத்தினால் தான். மைய அரசு 1965 சனவரி 26 லிருந்து ஆங்கிலம் அறவே நீக்கப் பட்டு இந்தியா முழுவதும் இந்தி வரும் என்றது. தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் சனவரி இரண்டாம் வாரத்திலே ஆரம்பித்தது. ஆங்கிலம் மற்றும் பல மாநில மொழிகள் காப்பற்றப் பட்டது. ராஜாஜி முதல்வராக இருந்த போது இந்தி கட்டாயப் பாடம்.அவர் சொன்னது-- இந்தி வழியாக நான் சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவேன் என்று. பின்பு அறுபதுகளில் அவரும் இந்திக்கு எதிராகப் போர்க் கோடி தூக்கினார். நேரு அவர்கள் இந்துஸ்தானி மொழியை இந்திக்கு பதிலாக கொண்டு வர எண்ணினார். அது இந்தியும் உருதுவும் கலந்தது. இனிமையான மொழி. ஆனால் எதிர்ப்பின் காரணமாக அவர் அந்த முயற்சியை கை விட்டார். இந்தி எதிர்ப்பின் காரணமாக அவர் ஒரு வாக்குறுதி அளித்தார்- - இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் மைய அரசின் இணை மொழியாகத் தொடரும்.- அந்த வாக்குறுதி இன்றும் தொடர்கிறது என்றும் தொடரும். ( தொடர்ச்சி 4 மேலே)
Name : Natarajan Country : Australia Date :4/10/2012 7:39:08 AM
தொடர்ச்சி- பகுதி இரண்டு - ராஜாஜி முதல்வராக இருந்த போது 1938 களில் இந்தியைத் திணித்தார். இந்தி எதிர்ப்பு போராட்டம் அப்பொழுதே ஆரம்பித்தது. இந்தி -- Indo aryan language- தமிழ் திராவிட மொழி.தனித்தியங்கும் வல்லமை பெற்றது. இந்திக்கும் அதற்கும் உள்ளது மொட்டைக்கும் முழங்காலுக்கும் கட்டுப் போட்டாது போல். இந்திக்கென்று தேவ நாகரி லிபி கொண்டு வரப் பட்டது. மைய அரசானது எல்லா மொழிகளும் தேவநாகரியில் எழுதப் பட வேண்டும் என்றது. மற்ற மொழிகளை அழித்து இந்தியை திணிக்கும் முயற்சி. இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழ் நாட்டில் தான் மும்முரமான போராட்டம். தேவநாகரியில் தமிழ் என்று கூட எழுத முடியாது. அதில் ' ழ ' என்ற எழுத்தே இல்லை. ழ என்ற எழுத்து தமிழ் மொழியில் மட்டுமே. தமிழில் இருந்து உருவான மலையாளத்திலும் ழ என்ற எழுத்து அதே வடிவில் உண்டு.மராத்தி மொழி பேசுவோர் இவ்வளவு நாள் தூங்கி இருந்து விட்டு இப்பொழுது உணர ஆரம்பித்தனர். இந்தி மராத்தி வளர்ச்சியை தடை செய்கிறது என்று. சிவசேனை இப்பொழுது கூக்குரலிடுகிறது - மராத்தி மொழியை காப்போம் என்று.-- பல இந்திய மொழிகள் இன்றும் உயிருடன் இயங்குவது ( தொடர்ச்சி மேலே)
Name : Natarajan Country : Australia Date :4/10/2012 7:19:48 AM
உண்மை. இந்தியாவுக்கு தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது என்பது நிறைய பேருக்கு தெரியாது. பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் தவறான -- ஹிந்தி தேசிய மொழி என்பதை _ மாணவர்களுக்கு சொல்லி வருகின்றனர். இந்தியா விடுதலை அடைந்ததும் கணக்கெடுப்பில் அதிகமானோரால் பேசப் பட்ட மொழி தெலுங்கு என்பது தெரிய வந்தது. உடனே பதினேழு வகையான வட இந்திய மொழிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு இது தான் இந்தி அதிகமானோரால் பேசப் படுகிறது என்ற பொய்யான கருத்து சொல்லப் பட்டது. போஜ்பூரி, மைதிலி, ராஜஸ்தானி போன்றவைகள் ஹிந்தி என்று கூறப் பட்டது. பீகாரில் பேசப் படும் இந்தி ராஜஸ்தானி களுக்குப் புரியாது. எது மைய அரசின் ஆட்சி மொழி என்று வந்த போது ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் சம வாக்குகள் கிடைத்தன. அப்பொழுது அவைத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் இந்திக்கு வோட்டளித்து ஒரு வாக்கு அதிகமாகப் பெறச் செய்தார். தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆங்கிலமும் மைய அரசின் ஆட்சி மொழியாக தொடர்கிறது. மற்ற மாநில மொழிகளும் உயிரோடு உலாவி வர தமிழ் நாட்டில் நடந்த இந்திப் போராட்டமே காரணம். (தொடர்ச்சி -மேலே பகுதி இரண்டு)
Name : nzm Date :4/10/2012 5:03:28 AM
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு இவர்கள் என்ன கத்தினாலும் வெளிநாட்டினருக்கு ஹிந்தி தான் இந்திய மொழி என்பது மிக நன்றாக தெரியும் ..
Name : Partha Country : United States Date :4/10/2012 4:24:32 AM
எவ்வளவு காலம் இந்த மாதிரி சொல்லி வாழபோகிரிரிககள் . வேறு வேலை இருந்தால் பாருங்கள்
Name : meerashah Date :4/10/2012 12:06:44 AM
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியோ, இல்லையோ.. இந்த போராட்டத்திற்காக உபயோகப்படுத்தும் ஆங்கிலம் மட்டும் உங்கள் தேசிய மொழியோ?? மொழி என்பது அழிவு அல்ல.. அது அறிவு.. ஒன்றை கற்றால் ஓன்று மறப்பதன்று. வெளிநாட்டுக்கு வேலைக்கு வா..உனக்கு தெரியும் ஏன் ஹிந்தி தேவை என்பது..
Name : meerashah Date :4/10/2012 12:03:28 AM
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியோ, இல்லையோ.. இந்த போராட்டத்திற்காக உபயோகப்படுத்தும் ஆங்கிலம் மட்டும் உங்கள் தேசிய மொழியோ?? மொழி என்பது அழிவு அல்ல.. அது அறிவு.. ஒன்றை கற்றால் ஓன்று மறப்பதன்று. வெளிநாட்டுக்கு வேலைக்கு வா..உனக்கு தெரியும் ஏன் ஹிந்தி தேவை என்பது..
Name : EBU/PARIS Date :4/9/2012 11:35:14 PM
இந்தியாவுக்கு என்று தேசிய மொழி /மதம் /உணவு /கலாசாரம் எதுவும் கிடையாது.அப்படி இருபது போல உண்டாகுகிரார்கள்.இந்தியா உணர்வால் இந்தியன் தான் எல்லோரும் .மற்றது ஒவ்வொரு மனிதன் மீதும் திணிக்க படுகிறது.