யுவராஜிற்கு டுவிட்டரில் சச்சின் வாழ்த்து
அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பி உள்ள இந்திய பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கிற்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: யுவி விரைவில் நலம் பெற வேண்டும்; புற்றுநோயுடன் போராடி நாடு திரும்பி இருக்கும் எனது சகோதரர் யுவராஜை உள்ளபூர்வமாக வரவேற்கிறேன். இவ்வாறு சச்சின் குறிப்பிட்டுள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் லண்டன் சென்றிருந்த சச்சின், அங்கு ஓய்வு எடுத்து வந்த யுவராஜை நேரில் சந்தித்துள்ளார். <a href='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' xhref='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' xhref='http://adex.adchakra.net/adex/www/delivery/ck.php?n=aae31074&cb=INSERT_RANDOM_NUMBER_HERE'target='_blank'><img src='http://adex.adchakra.net/adex/www/delivery/avw.php?zoneid=501&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=aae31074&ct0=INSERT_CLICKURL_HERE'border='0' alt='' /></a>