மதுரை மாநாட்டில் அத்வானி, மோடி கலந்துகொள்கிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரையில் நடக்கும் கட்சி மாநாட்டுக்கு அத்வானி, நரேந்திரமோடி உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் (05.04.2012) செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்,
உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராமர் பாலத்தை புனித பாலமாக அறிவிக்கவேண்டும். அதற்கு இடையூறு இல்லாத வகையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மதுரையில் வருகிற 28, 29 ந்தேதிகளில் பா.ஜனதா மாநில மாநாடு நடக்கிறது. இதில், அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், முதல் மந்திரிகள் நரேந்திர மோடி, சதானந்தகவுடா, சிவரஞ்சிவ் சவுகான் உள்பட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டுக்கு தமிழர்கள் அனைவரையும் அழைக்கும் வகையில், இரண்டு தமிழ்த்தாய் சிலைகள், இன்று முதல் 25 ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊர்வலமாக செல்கிறது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள தொலை நோக்கு திட்டம் கட்டாயம் தேவை. திட்டங்கள் மட்டுமின்றி, அதை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். மின்கட்டண உயர்வை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.