நகைக்கடைக்கு ஆதரவு: அடகுகடைகளும் மூடல்
இறக்குமதி செய்யப்படும் தங்கநகைகள் மீதான கலால் வரியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நகைக்கடை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர்.
இதனால் பெரும்பாலான நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக அடகுகடைகளின் உரிமையாளர்களும் இன்று (05/04/2012) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடகுகடைகள் மூடப்பட்டுள்ளன.