நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கும், நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளையும் (ஏப். 5), 12ந் தேதியும் அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06021) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் பகல் 12.15 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து 6 ந் தேதி மற்றும் 13 ந் தேதிகளில் பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06022) அடுத்த நாள் காலை 3.45 மணிக்கு சென்னையை அடையும். இந்த ரெயில்களில் 2 அடுக்கு, 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 12 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், சாதாரண வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.30 க்கு புறப்படும் ஏழைகளின் ரதம் (கரிப் ராத்) சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06019) நாளை பகல் 2 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து நாளை இரவு 7.40 க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06020) 6 ந் தேதி காலை 10.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயிலில் 14 ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட தகவலை, தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.