இளைஞர் பாசறை செயலாளர்: ஜெ. அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச் செல்வன் எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.