போர் குற்ற விசாரணை தீர்மானத்தை முறியடிப்போம் என்கிறார் மகிந்தா சமர சிங்கே
இலங்கையில் ராணுவத்துக்கும், தனி தமிழ் ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகளுக்கும் இடையே 20 வருடத்துக்கும் மேலாக நடந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இறுதி கட்ட போரின்போது, ஏராளமான அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு முன்னோடியாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இயங்கி வரும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை மீது போர் குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், ’’ஜெனிவாவில் நடந்து வரும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், எங்கள் மீது கொண்டு வரும் போர் குற்ற விசாரணை தீர்மானத்தை முறியடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று இலங்கை அரசின் குழு தலைவர் மகிந்தா சமர சிங்கே தெரிவித்துள்ளார்.