மதுரை : எம்.பி. மகன் வழக்கில் திருப்பம் - போலீஸ் அதிர்ச்சி
மதுரையில் காணாமல் போன முன்னாள் எம்.பி. காசிநாததுரை மகன் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
எம்.பி. மகன் கதிர்நாயகம் அடையாளம் காணாமல் போய்விட்டார் என்று மதுரை போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரை அடுத்து தேடுதல் வேட்டை நடைபெற்றது.
சில நாட்களுக்கு பின்னர் அடையாளம் தெரியாத அனைப்பிணம் ஒன்றை எரித்துவிட்டோம். அதுதான் கதிர்நாயகத்தின் சடலமாக இருக்கலாம் என்று கதிர்நாயகம் உறவினரிடம் கடந்த வாரம் புகைப்படத்தை காட்டி விளக்கம் கேட்டது போலீஸ். விளக்கத்தை அடுத்து கதிர்நாயகம் நினைவாக இறுதிச்சடங்கை முடித்தனர் உறவினர்.
இந்நிலையில் சடலத்தின் புகைப்படத்தை தற்போது பார்த்த கதிர்நாயகத்தின் மனைவி திடீர் என மறுப்பு தெரிவித்துள்ளார். எரிக்கப்பட்ட உடல் கணவர் கதிர்நாயகத்தின் உடல் அல்ல என்று மனைவி சண்முகசுந்தரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அனாதை சடலம் எங்கே? எரிக்க உத்தரவிட்டது யார்? அந்த சடலம்தான் கதிர்நாயகா? என நீதிபதி கேட்ட கேள்வி களுக்கு போலீசார் திணறினர்.
இந்த வழக்கின் மறு விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.