கின்னஸ் சாதனைக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நெல்லை தேர்தல் அதிகாரி உதவி ஆணையர் கலால் செல்வராஜுடம், டாக்டர் கே.பத்மராஜன் (வயது 52) வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கின்னஸ் சாதனைக்காக தேர்தல் நடைபெறும் இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக செய்துள்ள வேட்மனு 128வது மனுவாகும் என்று, பத்மராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மூன்றாவதாக வேட்புமனு தாக்கல் செய்தவர் ஸ்ரீராமச்சந்திரன். இவருக்கு வயது 31. இவர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். இவரும் கின்னஸ் சாதனைக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் சங்கரன்கோவிலில் உள்ள காந்தி சிலையில் இருந்து காந்தி உருவப்படத்தை ஏந்தியவாறு, தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.