மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம்
மின்வெட்டிற்கு தீர்வு ஏற்படாதபட்சத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ் அனுமதிப் பெற்று, மின்கம்பிகளில் துணி காயவைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
கரூரில், பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஸ்கரன் கூறியதாவது, தொடர்மின்வெட்டினால், மக்கள் மீளாத்துயரிற்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பால், பஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தியுள்ள நிலையில், தொடர் மின்வெட்டினாலும் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில், கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அனுமதிப் பெற்று, கரூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின்கம்பிகளில் துணிகாய வைக்கும் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.