சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கம்
சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;திருச்சி மாவட்டம் உறையூர் 57 வட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்விழி, ஜெகநாதன் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதோடு, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர். இவர்களிடம் கட்சி தொண்டர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
நீக்கப்பட்ட மலர்விழி மற்றும் ஜெகநாதன் ஆகியோர், சசிகலாவின் கணவர் நடராஜனின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பதாலும், நடராஜன் கைது செய்யப்பட்டபோது இருவரும் அங்கு இருந்ததாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது.