அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ய முயன்ற பெண் அடித்துக்கொலை
......................................
வேன் கவிழ்ந்து 4 இசைக்கலைஞர்கள் பலி
......................................
ஆடு, கோழிகளை கடித்து ரத்தம் குடித்த மயான கொள்ளை திருவிழா
......................................
குடியரசு கட்சியில் இந்தியருக்கு முக்கிய பதவி
......................................
மின் நிறுத்தம் : சிறுவன் கடத்தல்
......................................
பெனி பிரசாத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
......................................
ஒருவர் மீது ஒருவர் நெருப்பை அள்ளி வீசி கிராமத்தில் திருவிழா
......................................
220 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
......................................
மாநிலத்தின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை : பிரதமர்
......................................
சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் டாக்டர், இன்ஜினியர்கள், வக்கீல்!
......................................
ரயிலில் அடிபட்டு ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் பலி
......................................
மனைவி சித்ரவதை: நடிகருக்கு வலை
......................................
குழந்தைகள் கண்முன் இளம்பெண் கொடூரக்கொலை
......................................
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா
......................................
தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது : ராமதாஸ்
......................................
மாறு வேடத்தில் கோவை போலீஸ் கமிஷனர் நகர்வலம்
......................................
மணமேடையில் மகனுக்கு திருமணம்: மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்;நெகிழ செய்யும் சம்பவம்
......................................
கலைஞர் கொடும்பாவி எரித்த வழக்கு : நெல்லை மேயர் கோர்ட்டில் ஆஜர்
......................................
கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்
......................................
கலைஞர் 15ம் தேதி பிரச்சாரம்
......................................
இப்ராகிம் ராவுத்தர் அலுவலகத்தில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு
......................................
மம்தாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
......................................
நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் மறுப்பு: மணமகள் தந்தை தற்கொலை
......................................
புதிய படங்களுக்கு ரஜினி பட தலைப்புகள்!
......................................
ஜெயலலிதாவிற்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
......................................
விபத்தில் அமைச்சர் மகன் காயம்
......................................
காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்
......................................
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது: தேமுதிக
......................................
மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தேமுதிக
......................................
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைஇந்தியாஆதரிக்க வேண்டும்: தேமுதிக
......................................
தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக
......................................
தேமுதிக நிறுவனத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் விஜயகாந்த் தேர்வு (படங்கள்)
......................................
சங்கரன்கோவிலில் மார்ச் 15ல் கலைஞர் பிரச்சாரம்
......................................
முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சசிகலா தம்பி திவாகரனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருத்துரைப்பூண்டி நீதிமன்றம்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
......................................
2 பெண்கள் பலாத்காரம்: 11 பேர் கைது
......................................
பெண் போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
......................................
கதவை தட்டி 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு: மின்சாரம் இல்லாதபோது மர்மநபர்கள் துணிகரம்
......................................
டியூசன் டீச்சரிடம் 5 பவுன் நகை அபேஸ்
......................................
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
......................................
நிலத்தை விற்ற பணம் ரூ.15 லட்சம் கொள்ளை
......................................
அடகுக்கடையில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளை
......................................
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் சோனியா குடும்பத்துக்கு பொழுது போக்கு: மாயாவதி கிண்டல்
......................................
அமிதாப் பச்சன் உடல்நிலையில் முன்னேற்றம்
......................................
மதுரை: அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் திருட்டு
......................................
சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல! பேராசிரியர் அன்பழகன் பேச்சு!
......................................
எடியூரப்பா எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் முதல் மந்திரி ஆக முடியாது: ஸ்ரீராமுலு
......................................
பாரம்பரிய விளையாட்டுகளை வளர்க்க வேண்டும்: கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம்: திருமாவளவன்
......................................
கணவர்களுடன் சென்று வாழ்க்கை நடத்த மகள்கள் மறுப்பு: தீக்குளித்து தாய் தற்கொலை
......................................
வருமானவரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: ரிசர்வ் வங்கி
......................................
ரூ.16,600 கோடி செலவில் 22 திட்டங்கள்: வாசன்
......................................
மீனவர்களை இத்தாலியர்கள் சுட்டுக் கொன்றதை மன்னிக்க முடியாது: தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதி: வாசன்
......................................
சங்கரன்கோவில் தேர்தல்: கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை தர தேர்தல் அதிகாரி உத்தரவு
......................................
நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
......................................
பனிச்சரிவில் புதைந்து 4 பேர் சாவு
......................................
தெண்டுல்கருக்கு சிறந்த பேட்ஸ்மேன் விருது
......................................
ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012 (18:51 IST)



மணமேடையில் மகனுக்கு திருமணம்:
மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்
நெஞ்சை நெகிழ செய்யும் சம்பவம்


மணமேடையில் மகனுக்கு திருமணம் நடந்து கொண்டு இருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த வங்கி ஊழியர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம் நடந்த சம்பவம் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் மதியழகன் வங்கி ஊழியர். இவருடைய மனைவி ஜெயமணி (48). இவர்களுக்கு பொன்ராஜ், முத்தமிழ்செல்வன், செந்தமிழ்செல்வன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ஜெயமணியின் 2வது மகன் முத்தமிழ்செல்வனுக்கும், திருச்சி சிந்தாமணியை சேர்ந்த அனிதா கிரேஸிக்கும் இடையே காதல் இருந்து வந்தது.



இவர்களுடைய காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 20ந் தேதி திருமணம் நடத்தவும் பெரியோர்கள் நிச்சயித்தனர். திருமண விழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் வழங்கப்பட்டது.


கடந்த 12ந் தேதி ஜெயமணியும், அவருடைய மகன் முத்தமிழ்செல்வனும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க மோட்டார் சைக்கிளில் லால்குடியில் இருந்து திருச்சிக்கு சென்றனர். லால்குடி மெயின்ரோடு கபிரியேல்புரம் என்ற இடத்தில் வந்தபோது, ஜெயமணி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


ஜெயமணி உடல் நலம் தேறிவிடுவார் என உறவினர்களும், பெரியோர்களும் திருமண ஏற்பாடுகளை ஒருபுறம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெயமணிக்கு திடீரென்று மூளைச்சாவு ஏற்பட்டது.
 
இது குறித்து டாக்டர்கள் ஜெயமணியின் கணவர் மதியழகன் மற்றும் அவருடைய மகன் பொன்ராஜ் ஆகியோரிடம் ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மேலும் 3 பேருக்கு அவரால் வாழ்வு அளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.


இதையடுத்து ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவருடைய கணவர் மதியழகன் மற்றும் மகன் பொன்ராஜ் ஆகியோர் முடிவு செய்தனர். ஆனால் திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தகவலை மணமகன் முத்தமிழ்செல்வனுக்கும், அவருடைய உறவினர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.



நேற்று காலை 8.30 மணிக்கு ஜெயமணியின் உடலில் இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், ஒரு கண் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. பின்னர் அந்த உறுப்புகள் சென்னை, மதுரை, திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு 3 பேருக்கு பொருத்தப்பட்டன.


இதற்கிடையே நேற்று காலை 10 மணிக்கு முத்தமிழ்ச்செல்வனின் திருமணமும் நடந்தது. அதன்பிறகே ஜெயமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் முத்தமிழ்செல்வனுக்கும், திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கும் தெரியவந்தது.


இதனை கேட்ட முத்தமிழ்செல்வன் தன் தாயின் பிரிவை நினைத்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். தாயை விட்டு பிரிந்த சோகத்திலும், அவருடைய உடல் உறுப்புகள் 3 பேருக்கு வாழ்வு அளித்ததை எடுத்துக்கூறி அவரை சமாதானம் செய்தனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : Karthikeyan Date :2/26/2012 10:02:53 AM
சொல்வதற்கு வார்த்தை இல்லை. இப்படியும் ஒரு சிலர் இருப்பதால் தான் இன்னும் இந்த உலகம் செயல் பட்டு கொண்டு இருக்கிறது. தர்மம் தலைகாக்கும்!!!
Name : sivaraman Date :2/25/2012 11:39:12 PM
இறந்தும் இரந்தவர். இறை நம்பிக்கை குறைந்து வரும் காலங்களில் இவர்களைப் போன்றோர் இறைவனுக்கு சமமானவர்கள்.....
Name : Reno Beula Date :2/24/2012 7:50:33 AM
சொல்ல வார்த்தைகள் இல்லை..... மனிதன் மனிதனாக வாழ ஒரு எடுத்துக்காட்டு........
Name : Reno Beula Date :2/24/2012 7:49:37 AM
சொல்ல வார்த்தைகள் இல்லை..... மனிதன் மனிதனாக வாழ ஒரு எடுத்துக்காட்டு........
Name : vijayakumar Country : India Date :2/22/2012 3:49:19 PM
ஆழ்ந்த இரங்கலும் , மணமக்களுக்கு வாழ்த்துக்களும்
Name : Abdul Date :2/22/2012 11:44:47 AM
இவர்களை போன்ற மனிதர்கள் இருப்பதால் தான், இந்த பூமியில் இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறதோ என்னவோ,,
Name : Murugavel. Muthukumaran Country : Australia Date :2/22/2012 11:02:22 AM
திரு ஜெயமணி மற்றும் அவரது பிள்ளைகளின் செயல் மிகவும் போற்றத்தக்கது. மிகப்பெரும் துயரத்திலும் இம்மாதிரியான நல்ல செயல் செய்த ஜெயமணி குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலையும் பாராட்டையும் தெரிவிக்கிறோம்!
Name : karambakkudi majeed al ain Date :2/22/2012 9:47:20 AM
மனதை நெகிழ செய்யும் சம்பவம் அந்த அன்னையின் ஆத்மா சாந்தியடையட்டும் இத்தனை துயரத்திலும் மனைவியின் உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க முன்வந்த அந்த நல்ல உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்
Name : nilamathi Country : Australia Date :2/22/2012 6:59:35 AM
மிகவும் போற்றத்தக்க ஒரு குடும்பம் !
Name : S Manikantan Date :2/21/2012 10:04:44 PM
மனித வடிவில் தெய்வம் , நாம் தொழுவோம்