ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில்,
உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்.
தெண்டுல்கர் 23 ஆண்டுகள் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து விலக இது சரியான தருணம். டிராவிட், லட்சுமண் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற வேண்டும். டோனி தனது சொந்த நலனுக்காக அணி தேர்வில் தவறுகள் செய்கிறார். இந்த தவறை அவர் தொடர்ந்தால் நீண்ட நாள் நீடிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.