தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: கேரளாவில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கேரளாவில் 2 தமிழக மீனவர்கள் இத்தாலிய சரக்கு கப்பல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரள கடலோர மீனவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் பி.ராஜு கூறுகையில் `நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 மீனவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக மாநில அரசு ரூ.10 லட்சம் குடும்ப நிதி வழங்க வேண்டும். கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க மத்திய-மாநில அரசுகள் தவறி விட்டன. துப்பாக்கியால் சுட்டு கொன்றவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது' என்றார்.