உ.பி: 55 தொகுதிகளில் இன்று ஓட்டுப் பதிவு
உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று (புதன்கிழமை) 55 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.
10 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள இந்த தொகுதிகளில் மொத்தம் 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இந்த தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. ஓட்டுப்பதிவு நடைபெறும் 17 ஆயிரத்துக்கு அதிகமான ஓட்டுச்சாவடிகளில் 680 கம்பெனி மத்திய போலீஸ் படை வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். மொத்தத்தில் 2 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஓட்டுப்பதிவை முன்னிட்டு, நேபாள எல்லைப்பகுதிகள் சீல்' வைக்கப்பட்டு உள்ளன.