அண்மைச் செய்திகள்
ஆந்திர அரசு மீண்டும் கைவிரிப்பு, பொதுப்பணித்துறை கடும் அதிர்ச்சி || கன்னியாஸ்திரி சம்பவத்தில் 4 பேர் கைது || பெட்ரோல், டீசல் விலை குறைப்பு || பதனீர் இறக்குவதை தடை செய்யக்கூடாது: சரத்குமார் || பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடியை தாண்டியது || டெல்லி யமுனை நதிக்கரையில் நரசிம்மராவுக்கு நினைவிடம் || கேரளாவுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தம் || பாம்பனில் 20 கோடி மதிப்பில் புதிய தூக்குப்பாலம் || பள்ளி மாணவி சுட்டுக்கொலை || ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தியர்கள் மீட்பு உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கி தவித்த 350 இந்தி || பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை கீழே தவறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் தவிப்பு ஈ || மருத்துவ மேற்படிப்புகளில் ஜாட் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு || மலையாளம்-தமிழ் அகராதி வெளியீடு ||
தமிழகம்
தமிழ் திரைத்துறையைக் காக்க வேண்டிய கடமை ஒரு தமிழராக கிருஷ்ணசாமிக்கும் இருக்கிறது: சீமான்
......................................
கலைஞரின் மகாவீரர் பிறந்த திருநாள் வாழ்த்துச் செய்தி!
......................................
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
......................................
பதனீர் இறக்குவதை தடை செய்யக்கூடாது: சரத்குமார்
......................................
பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடியை தாண்டியது
......................................
டெல்லி யமுனை நதிக்கரையில் நரசிம்மராவுக்கு நினைவிடம்
......................................
கேரளாவுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தம்
......................................
பாம்பனில் 20 கோடி மதிப்பில் புதிய தூக்குப்பாலம்
......................................
வசதியான புள்ளி விவரங்களை கூறி மக்களை ஏமாற்ற முதலமைச்சர் முயல்வதா?: ராமதாஸ்
......................................
பெரும்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை கீழே தவறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் தவிப்பு ஈ
......................................
மருத்துவ மேற்படிப்புகளில் ஜாட் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
அரசு சிமென்ட் ஆலையை மூட தடை கோரி வழக்கு
......................................
உத்தமவில்லன் படம் வெளியிடும் தேதி திடீர் தள்ளி வைப்பு
......................................
ஒருநாள் முன்பாக 'கொம்பன்' படம் இன்று திரைக்கு வருகிறது
......................................
தமிழக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு
......................................
தேமுதிக உறுப்பினர்களின் தடையை நீக்க வேண்டும்: வாசன்
......................................
முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? இளங்கோவன் கேள்வி!
......................................
சாலை விபத்தில் திமுக நகர செயலாளர் பலி! மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!
......................................
பழைய பஞ்சாங்கம் படித்தது போலிருந்தது! சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
சர்வாதிகார ஆட்சியின் ஜனநாயகப் படுகொலை: தேமுதிக உறுப்பினர்கள் இடைநீக்கம்: விஜயகாந்த் கண்டனம்
......................................
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி 10 நாட்களுக்கு சஸ்பெண்ட்!
......................................
சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் சார்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு
......................................
கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!
......................................
காவிரியின் குறுக்கே எந்த ஒரு இடத்திலும் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
......................................
வெள்ளிக்கிழமை, 3, மே 2013 (9:51 IST)பிளஸ்–2 தேர்வு முடிவை தெரிந்துகொள்ள இணையதள முகவரிகள்


தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள். தேர்வு முடிவு 9–ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவு 4 அரசு இணையதள முகவரிகளில் வெளியிடப்படுகிறது. அது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
2013 மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ்–2 தேர்வுக்கான முடிவுகள் 9–ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவை மாணவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 மையக்கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசு இணையதள முகவரிகள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
http://tnresuts.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge3.tn.nic.in இவற்றில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரி GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவு தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
செல்போனில் குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்) மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவை தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறுந்தகவல் சேவை மூலம் தெரிந்துகொள்ள கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து 8–ந்தேதி அன்று தெரிவிக்கப்படும்.
 
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் மூலம் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :