விருதுநகரில் குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவியை, காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயமடைந்தார்.
விருதுநகர் அல்லம்பட்டி கவுரவ நாயுடு காலனியை சேர்ந்த தர்மராஜ்,32. மனைவி விஜயலட்சுமி,28. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரவு, குடும்ப தகராறு காரணமாக விஜயலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.
அவரை காப்பாற்ற முயன்ற கணவர் தர்மராஜ் காயமடைந்தார். இருவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் இருந்தும், பயன்படுத்தாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.