மின்கட்டண உயர்வை எதிர்த்து கெஜ்ரிவால் போராட்டம்
டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் ஆளும் காங்கிரஸ் அரசு சமீபத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், அன்னா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
இதில் பிரஷாந்த் பூஷண் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 400 பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில், அரசு உயர்த்தியுள்ள மின்கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மின்கட் டணத்தை செலுத்தவேண்டாம் என்று அங்கு கூடி இருந்தவர்களிடையே கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
போராட்டத்தின் போது, கெஜ்ரிவால் ‘ஒத்துழையாமை இயக்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத் துவதாக அறிவித்தார்.