அண்மைச் செய்திகள்
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) ||
இலங்கை
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 22, செப்டம்பர் 2012 (11:29 IST)

 ராஜபக்சே வருகையை கண்டித்து
பாமக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி




இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் ஒரு  விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார்.

அவர் இந்தியா வந்துள்ளதை கண்டித்து  நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் இந்தியா வந்ததை கண்டித்து கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் தலைமை தாங்கினார். தாந்தோணி நகர செயலாளர் எஸ்.பி.குமார், ஒன்றிய செயலாளர்கள் சாதிக்அலி, செந்தில், ராஜா, விஜயகுமார், சரவணன் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டித்து,

அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்திய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென்று பல்வேறு கோஷங்கள் போட்ட படி ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர்.

இந்த நிலையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டு இருந்த போது அங்கிருந்த தாந்தோணி நகர இளைஞர் அணி செயலாளர் பெருமாள் (வயது25) ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டிக்கிறேன் என்று கூச்சலிட்டபடி திடீரென்று தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ரோட்டின் தடுப்பு சுவரில் மண்எண்ணெய் கேனுடன் ஏறி, மண் எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டே ஓடினார்.

பின்னர் தீப்பெட்டியை எடுத்து தனது உடலில் பற்ற வைக்க முயன்றார். அப்போது தீப்பெட்டியை பற்ற வைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று பெருமாளிடம் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி கீழே எரிந்தனர். பின்னர் மண்எண்ணெய் பற்றி இருந்த அவரது  சட்டையை கழற்றி அவரை காப்பாற்றி அழைத்து வந்தனர்.

இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜபக்சே உருவ பொம்மை எரித்த  22 பேரை போலீசார் கைது செய்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : eelavan Date :9/23/2012 3:58:18 PM
இந்த திராவிடம் இருக்கும் வரை இந்த தீக்குளிப்பு எல்லாம் பயன் இல்லாத செயல் அநியாயமாக உயிர் இழக்கவேண்டாம்.
Name : Ravi-Swiss Date :9/23/2012 11:41:38 AM
இப்படத்தை எடுத்த நிருபரை உண்மையாகப் பாராட்டவேண்டும்' மிகத் தத்ருபமாக உண்மையுடன் கஸ்ரப்பட்டு எடுத்து இருக்கின்றார்' 2013 ஆண்டின் மிக சிறந்த படமாக இதனை நான் சிபார்சு பண்ணுகின்றேன்' வாழ்த்துக்கள்'
Name : Ravi-Swiss Date :9/23/2012 1:03:31 AM
சேலம் விஜஜ் தீக்குளிப்பு நேரமே' நாம் தமிழக மக்களுக்கு கண்டிப்பான அன்பு வேண்டுகோள் விடுத்தோம்' அதாவது தமிழக மக்களுக்கு ஈழத் தமிழர்கள்' உலகத் தமிழர்கள் மேல் அன்பு இருந்தால்' தஜவு செய்து தீக்குளிப்பு வேண்டாம் என்று''? ஆனால் பெருமாள் கேட்டாரா''? நல்லகாலம் தீப்பெட்டி பற்றாமல் போய்விட்டது' பற்றி இருந்தால்''? பெருமாள் மேல் குடும்பம் கவனமுடன் இருக்கவும்' மீண்டும் இப்படி ஓர் சம்பவம் நடக்காமல் இருக்க' கவனம் தமிழர்களே''?
Name : peyarilla Country : United Kingdom Date :9/22/2012 2:36:10 PM
உங்கள் உயிர் எவ்வளவு உன்னதம் ஆனது.வெயில் கண்டு உருகி ஓடும் பனி போல அந்த படு பாதகன் ராஜபக்சே அழிந்து போவது உறுதி.ஈழத்தில் அவன் போரை நிறுத்தாமல் தொடர்ந்த நேரம் பேசாமல் இருந்து விட்டு இப்ப உங்கள் உயிரை மாய்ப்பது எந்த லாபமும் தராது. ஆளுமை,வீரம்,விவேகம் நிறைந்த இனம் தமிழர்.அவர்களின் திறமை கீழ் தள்ளுது.மேற்கு நாட்டில் கூட எத்தனை முயற்சி எடுத்து முன்னேற முயன்றாலும் தடைகளை ஏற்படுத்துகின்றனர். தமிழன் கையில் ஸ்ரீலங்கா இருந்து இருந்தால் சிங்கப்பூர் போல ஆகி இருக்கும்.எங்கு அடித்தாலும் பின்னங்கால் தூக்கி ஓடும் நாய் போல நாட்டை ஆளத் தெரியாததுக்கு தமிழன் மேல் பழி போட்டு ஆளும் சிங்கள தலைமைகளினால் தான் தமிழன் நாடு விட்டு நாடு போய் அகதியாக கேவலம் படுகிறான்.பிறந்த நாட்டை விட்டு இப்படி அலைந்தால் தான் அந்த வலி தெரியும்.சிங்கள அரசுக்கு போதுமான காலம் கொடுத்து ஆயிற்று.மேற்கு நாடுகள் எதுவும் தமிழருக்கு பெற்று தரவில்லை.காங்கிரஸ் பிரதமர் மகிந்தவை சந்திக்கும் போது உரிமை கொடுக்கும் படி வற்புறுத்துவார்.தனிமையில் எதுவும் கொடுக்காதே என்று அறிவுரை கூறுவார்.நாடகம்.மீண்டும் புலிகள் வழியில் இறங்க தமிழகம் தயாராகவேண்டும்.
Name : A.SIVAKUMAR, N.PUTHUPALAYAM, KARUR,TAMIL NADU Country : Australia Date :9/22/2012 1:48:54 PM
தீக்குளித்து உயிரை மாய்த்துகொள்ள முயன்ற பாட்டாளி நண்பனை நான் தலை சாய்த்து வணங்குகிறேன்.
Name : malaravan Country : Singapore Date :9/22/2012 1:16:47 PM
இது மாதிரியான அற்ப விளம்பரம் நாடும், போலி தமிழர்களை நாம் உக்குவிக்க கூடாது, தமிழக தலைவர்கள் தயவு செய்து, மக்களை தற்கொலை செய்யும் அளவுக்கு உசுப்பு எற்ற கூடாது, உண்மையான தமிழனாக இருந்தால் தமிழனுக்கு தமிழன் பரஸ்பரம் உதவி செய்ய வேண்டும், தன் இன பெண்களை சகோதரி போல நினைக்க (மனைவி தவிர ) வேண்டும். "வேண்டாம் வன்முறை"- தயவு செய்து இதை போடவும். அன்பன் -மலரவன்