எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் புதிய கட்டிடம்: ஜெ., திறந்து வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா 11.9.2012 அன்று தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை யில் 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறப்பு மகப்பேறு சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை காணொலிக் காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை; கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைகள்; சென்னை, எழும்பூர், அரசு தாய் சேய் நல மருத்துவமனை; திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார். அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், கோயம் புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் 75 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக 24 படுக்கை வசதிகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய புதிய சிறப்பு மகப்பேறு பிரிவிற்கான புதிய கட்டடத்தைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வசதிகளை விரிவுப்படுத்தும் வகையில் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக 30 படுக்கை வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய புதிய மகப்பேறு பிரிவு கட்டடங்கள். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 65 லட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ மனையில் 80 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடங்கள். சென்னை, எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்கும் பொருட்டு 31,000 சதுர அடி பரப்பில் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடும்ப நலப் பிரிவிற்கான புதிய கட்டடங்கள்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்காக 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் தரைத் தளத்தில் 23 மற்றும் முதல் தளத்தில் 26 தனித் தனி அறைகளுடன் கட்டப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர் விடுதி கட்டடங்கள், என மொத்தம் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டட ங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.