அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
இலங்கை
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 11, செப்டம்பர் 2012 (15:32 IST)


உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!
 பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி!


சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார்.

இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (11.09.2012) சென்னையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,


யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய்யுமாறு என்னை அணுகினார்கள். ஈழத்தமிழர்களின் மனங்களில் விடுதலைப் பாடல்களின் மூலம் நீங்காத இடம் பிடித்த நான், யாழ்ப்பாணம் சென்று அவர்களை சந்திக்கவும், இசை கச்சேரி நடத்தவும் ஒப்புக்கொண்டேன். 

இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென தமிழ் மக்கள் பலரின் படுகொலைக்கு காரணமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளரான டக்ளஸ் தேவானந்தா திடீரென தன் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சிலருடன் மேடையில் ஏறி, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற வேண்டதகாத சம்பவமாகும். இந்த சம்பவத்தை பற்றி மிகுந்த மனம் வருத்தமடைகிறேன். என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாவேன். என் இசை பயணத்தில் அச்சம்பவம் கரும்புள்ளியாக விழுந்துவிட்டதை உணருகிறேன். இனி வரும் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடைபெறாது என உறுதிகூறுகிறேன். இந்நிகழ்வு தமிழர்களை காயப்படுத்தியிருக்கும். அதற்காக மீண்டும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(13)
Name : nkulandhaisamy Country : United States Date :9/12/2012 5:29:53 PM
அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது மிகவும் பெருந்தன்மையான விஷயம்.நன்றி உன்னிக்ரிஷ்ணன் அவர்களே!
Name : KODISVARAN, Malaysia. Country : Malaysia Date :9/12/2012 5:05:00 PM
உன்னி கிருஷ்ணன் வெளி மாநிலத்தவர் இல்லை. தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்தவர். பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டுவிட்டார். மறப்போம்! மன்னிப்போம்! ஆனால் அசினை மன்னிக்கக் கூடாது!
Name : thamil selvi Country : United Kingdom Date :9/12/2012 4:03:34 PM
இசைத் துறை, சினிமா துறையை சேர்ந்தவர்களே இலங்கையின் வட பகுதியில் எந்த நிகழ்ச்சியும் இராணுவத்தினதும் அரசாங்கத்தினதும் தொடர்பு இல்லாமல் நடை பெறாது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் நன்றாக தெரியும்.
Name : R,senthilkumar. Date :9/12/2012 2:15:41 PM
திரு உன்னி கிருஷ்ணன் அவர்களே தவறுகள் மன்னிக்கப்படும், தப்புதான் மன்னிக்கப்படாது. மன்னிப்பு கேட்டதால் பெரிய நிலைக்கு வந்துவிட்டிர்கள் . .
Name : sathees Date :9/12/2012 2:12:29 PM
தமிழர்களின் இன உணர்வுகளை புரிந்ததற்கு நன்றி...
Name : gbsunda Country : Hong Kong Date :9/12/2012 12:22:02 PM
நான் விசாரித்து பார்த்ததில் இன் நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியது இலங்கை அரசாங்கங்கமோ மேலும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடைய அமைப்புக்களும் இல்லை....இது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆதரவில் நல்லூர் திருவிழாவை முன்னிட்டும் ராமநாதன் கல்லூரியில் இசை பயிலும் மாணவிகளுக்காகவும் வேறும் சில கல்லூரிகளுக்காகவும் இசையை ஊக்குவிக்க நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று தகவல் வந்தது, நிகழ்ச்சி அட்டவணையில் டக்கிலஸ் தேவாவுக்கும் எந்த அழைப்பிதலும் விடுக்கப்படவில்லை...அவராகவே திடீரென்று மண்டபத்துக்குள் உள்நுளைந்துள்ளார்...
Name : arivu Date :9/12/2012 4:26:43 AM
நிகழ்வில் நடந்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதுக்கு ஈழத்தமிழர் சார்பாக வரபேட்பையும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் தெரிவிக்குரன்,, நன்றி
Name : Paramanathan-Denmark Date :9/12/2012 1:38:28 AM
அன்புள்ள உன்னி கிருஷ்ணன் அவர்களே உங்களின் நல்ல உள்ளம் ஈழத்தமிழர்களுக்குத் தெரியும் நடந்தது ஒரு விபத்து என்று நினைத்துக் கொள்வோம். இனத் துரோகிகள் நல்லவர்களை குறிவைத்து எம்மிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றார்கள் . இப்போது காலம் அவர்களின் கையில். நாம் விழிப்பாக இருக்க வேண்டும்
Name : கரிகால்சோழன் Country : Germany Date :9/12/2012 1:18:07 AM
திரு பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களே நன்றி என்ற ஒரு வார்த்தையுடன் உங்களுக்கு நன்றி கூறினால் அந்த நன்றிக்கே அர்த்தம் இல்லாமல் போதும் யார் என்று தெரியாமலே நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கும் உங்களுக்கு மன்னிப்பும் உண்டு அதே வேளை உங்களுக்கு அனைத்துலக தமிழர்களின் ஆதரவு என்றும் உண்டு இப்போது உங்களுக்கான ஆதரவு பன் மடங்கு பெருகியுள்ளது,,ஈழதமிழருக்கு பலர் இணைந்து பல துரோகங்களை செய்துள்ளார்கள்..இப்போதும் அவர்கள் தங்களை திருத்திக்கொள்ளாமல் தங்கள் செய்தது சரி என்று கூறி மற்றவர் மீது பழியை சுமத்தி தப்பிக்கொள்ள பார்கிறார்கள் அதே நேரம் தெரியாமல் நடந்த தப்புக்கு தெரிந்து மன்னிப்பு கேட்ட நீங்கள் நேர்மையானவராகவும் அன்புள்ளவராகவும் இருக்கிறீர்கள் நன்றி ஐயா நன்றி
Name : Ravi-Swiss Date :9/12/2012 12:13:49 AM
நல்ல விசஜம் பாராட்டலாம்'
Name : gbsunda Country : Hong Kong Date :9/11/2012 9:37:44 PM
மலையாளியாக இருந்தாலும் தமிழர்களின் இன உணர்வுகளை புரிந்ததற்கு நன்றி சார், ஈழ தமிழர்களை பொறுத்தவரை கலைத்துறையை சேர்ந்த எல்லோரும் கலைநிகழ்ச்சி நடத்த ஈழத்துக்கு வாருங்கள் ரொம்ப மகிழ்ச்சி......ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் மட்டும் நிகழ்சிகள் நடத்த வரவேண்டாம் என்பதே அவர்களின் ஆதங்கம்....
Name : Rengan Country : Australia Date :9/11/2012 8:32:29 PM
தமிழ் நடிகர், நடிகைகள், பாடகர்கள் போன்ற கலை உலகை சேர்ந்தவர்கள், இலங்கைக்கு சென்று இசை கச்சேரி நடத்துவது, பாடல்கள் இசைப்பது, நாட்டியம் ஆடுவது போன்றவை, ......................... "ஆற்றவொண்ணா" சோகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களிடையே, இயல்பு நிலைக்கு திரும்ப கிடைக்கும் நல் வாய்ப்பாகும்...............................அதை நாம் வரவேற்க வேண்டும். அதே சமயம் அங்கு போகும் நம்மவர்கள் அங்குள்ள தமிழர்களை மகிழ்விக்க மட்டும் போக வேண்டும். அவர்களை மட்டுமே சந்திக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிக்கு போகும் நம் தமிழ் கலை உலகை சேர்ந்தவர்களை, ஊக்க படுத்த வேண்டுமே தவிர, எதிர்க்க கூடாது....................... கலை நிகழ்ச்சிகளை கண்டு இலங்கை தமிழர்கள் சந்தோசமாக இருக்கட்டுமே..................
Name : gbsunda Country : Hong Kong Date :9/11/2012 3:41:10 PM
மேலும் அசின் இலங்கை சென்று திரும்பியது தெரிந்தும் எந்த வருத்தமோ கண்டனமோ தெரிவிக்காமல் எதிர்மாறாக காவலனில் தன்னுடன் ஜோடியாக நடிக்க விரும்பிய விஜய்யை விட உன்னிமேனன் மோசமானவர் இல்லை....இந்த குற்றசாட்டை விஜய்யிடம் கேட்க போனால் நடிகையை தேர்வு செய்வது தயாரிப்பாளரின் முடிவு என்று கூறி தப்பித்து விடுவார்...நம் வீட்டுக்குள்ளேயே துரோகங்கள் இருக்கும் போது வெளி மாநிலத்தாரை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை......