கல்லூரி அதிபர் ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமின்
ஜேப்பியாருக்கு சொந்தமான கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு திடல் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சைக்காக அவர் இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.