ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு: புதிய நீதிபதி நியமனம்
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற புதிய நீதிபதியாக சோமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரித்து வந்தார். அவரது நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா இன்று (31/08/2011)ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூர் சிறப்பு நிதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சோமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.