கூடங்குளம் குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: உதயகுமார்
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (31.08.2012) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு உறுப்பினர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை குறித்து சென்னை உயர் நீதிமனறம் அளித்துள்ள தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்றும், அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.