குறைவான வருகைப் பதிவு: உன்முக்த் சந்த் கல்லூரி நிர்வாகத்துடன் கபில் சிபல் பேச்சு
ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வந்த இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் உன்முக்த் சந்த்தை, குறைவான வருகைப் பதிவு காரணமாக ஆண்டு இறுதித் தேர்வை எழுத அவரது கல்லூரி நிர்வாகம் தடை செய்துள்ளது.
இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், உன்முக்த் சந்த்தின் கல்லூரி முதல்வரிடம் பேசி, அவரை தேர்வெழுத அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல் தெரிவித்துள்ளார்.