அண்மைச் செய்திகள்
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமறைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை || நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி || கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது || ஐ.பி.எல். இறுதி போட்டியில் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை || கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் ||
இலங்கை
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 31, ஆகஸ்ட் 2012 (10:6 IST)



திருச்சியி​ல் நடக்க இருந்த இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி ரத்து

இலங்கை தலைநகர் கொழும்பை சேர்ந்த 54 மாணவ, மாணவிகள் உள்பட 70 பேர் கொண்ட குழுவினர் கலாசார பயணமாக திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரிக்கு கடந்த 29.08.2012 அன்று வந்தனர்.


அவர்களுக்கு கல்லூரி இயக்குனர் அந்துவான், முதல்வர் மார்கிரெட் பாஸ்டின் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் கலைக்காவிரி கல்லூரி மாணவிகளின் இந்திய கலாசார நடனங்கள் நடந்தது. அதை இலங்கை குழுவினர் கண்டு களித்தனர்.

அதே அரங்கத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இதையறிந்த தமிழ்தேச பொதுவுடமை கட்சி நிர்வாகி இனியன்  தலைமையில் சுமார் 15 பேர் கருப்பு கொடியுடன் கல்லூரிக்குள் திடீரென புகுந்தனர்.


ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளை உடனே ரத்து செய்ய வேண்டும். கலாசார குழுவினரை கல்லூரியை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் காந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சிகாமணி மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று பிரபு, இனியன் உள்பட 15 பேரை கைது செய்தனர். இந்த பிரச்னையை தொடர்ந்து கல்லூரியின் முன்பக்க கேட் பூட்டப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கல்லூரி கேட் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த இலங்கை மாணவர்களின் கலாசார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இலங்கை குழுவினரை உடனடியாக திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : janakiraman Country : India Date :8/31/2012 4:32:41 PM
pramatham
Name : su.kapilan Country : Australia Date :8/31/2012 11:18:23 AM
சரியான அடி கொடுத்த தமிழ் தேச பொதுஉடமை eiyakka தோழர் களுக்கு vaalththukkal