ஓசூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி
ஓசூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பலியாயினர்.
ஓசூர் அருகே உள்ள சின்னஇலசகிரியை சேர்ந்தவர் கலைசெல்வன் (50). இவர் தனது மனைவி மஞ்சுளா, மகன் சுரேஷ்குமார் (20) ஆகியோருடன் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முடித்து விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மத்தூர் அருகே சாலையோர தடுப்பு சுவர்மீது கார் மோதியது. இவ்விபத்தில் மஞ்சுளா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலத்த காயமடைந்த கலைசெல்வன் உட்பட மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரூ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.