மன்மோகன் சிங்- ஆசிப் அலி சர்தாரி சந்தித்து பேச்சு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும் 16-வது அணி சேரா நாடுகளின் மாநாட்டுக்கு இடையே, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் சந்தித்து பேசினார்கள். இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக நடைபெறும் சந்திப்பு இதுவாகும்.
தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பான இந்திய தரப்பின் விளக்கத்தை பாகிஸ்தான் அதிபரிடம் மன்மோகன் சிங் எடுத்துரைத்தார். மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப்புக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது குறித்தும், இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானில் தங்கியுள்ள மற்ற தீவிரவாதிகளை தண்டிப்பது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது மன்மோகன் சிங் எடுத்து கூறினார்.