விவாதத்தின் மூலமே உண்மை வெளிவரும்: சோனியா
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக உரிய விவாதம் நடத்தப்பட்டால் மட்டுமே, உண்மை வெளிவரும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, பார்மரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இதுகுறித்த விவாதத்தில் பாரதிய ஜனதா பங்கேற்க மறுப்பது ஏன் என்பது குறித்து அக்கட்சி விளக்கம் வேண்டும். விவாதத்தின் மூலமே, பல உண்மைகள் வெளிவரும். பார்லிமென்ட் முடக்கத்தை பலகட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது என சோனியா கூறினார்.