அண்மைச் செய்திகள்
ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார் ||
விளையாட்டு
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (16:11 IST)



நான் விரும்பும் வரை கிரிக்கெட்டில் நீடிப்பேன்: சக்கின் டெண்டுல்கர்



நான் விரும்பும் வரை கிரிக்கெட்டில் நீடிப்பேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


நான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 99வது சதத்தை எடுத்தேன். அப்போது 100வது சதம் பற்றி யாரும் பேசவில்லை. அந்தக் கட்டத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றியே பேசினார்கள். அது முடிந்ததும் எனது 100வது சதம் பற்றி பேச தொடங்கி விட்டார்கள். அந்த காலக்கட்டத்தில் நான் முழங்கை காயத்தால் அவதிப்பட்டேன். இதனால் 4 மாதங்களாக சரியாக ஆடமுடியவில்லை. மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினரின் துணையால் குணம் பெற்றேன்.


குறிப்பாக எனது மனைவி பக்கபலமாக இருந்தார். ஏனென்றால் அவர் ஒரு மருத்துவர். எனக்கு வேண்டிய எல்லா மருத்துவ உதவிகளையும் அவர் செய்தார். நான் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் மிக மிக எடை குறைந்த பிளாஸ்டிக் பேட்டி கூட தூக்க முடியவில்லை.


இப்போது முழு திறனுடன் இருப்பதற்கு எனது மனைவி ஒரு காரணம். நான் எதையும் நினைத்து கவலைப்படமாட்டேன். எளிதாக எடுத்துக்கொள்வேன். நான் விரும்பும் வரை கிரிக்கெட்டில் நீடிப்பேன். அதை அனுபவித்து ஆடிவருகிறேன். அதை விட்டுவிடும் மனநிலை இப்போதைக்கு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :