பிரணாபுக்கு எதிராக சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி, பி.எ. சங்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, பிரணாப் முகர்ஜி புள்ளியியல் துறையில் ஆதாயம் பெறும் பதவியில் இருந்ததாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி சங்மா தனது மனுவில் கூறியுள்ளார்.