மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிலக்கரி முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக மதியம் 12 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு பிறகு 12 மணிக்கு அவை கூடியதும், மீண்டும் பாஜக உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து மக்களவையை நாள் முழுமைக்கும் சபாநாயகர் ஒத்தி வைத்தார்.