பிறந்த 20 நாளில் கழுதைப்பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தை கொலை
பிறந்து இருபது நாட்களேயான பெண் குழந்தைக்கு, கழுதை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு நெலமங்களா தாலுகா ஒசஹள்ளியில் வசித்து வந்தவர் சந்தீப். இவரது மனைவி சவீதா. இவர்களுக்கு, இருபது நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 20 நாளில், கழுதை பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை பெற்ற தந்தையே கொலை செய்தார்.இது பற்றி போலீஸ் ஸ்டேஷனில் சவீதா கொடுத்த புகாரில், "என் கணவருக்கு பெண் குழந்தை பிடிக்கவில்லை. இதனால் குழந்தைக்கு, கழுதை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, சந்தீப்பை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.