மருத்துவமனைக்கு படையெடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்
மத்திய அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், கல்லீரல் புற்றுநோய் தாககி கடந்த வாரம் உயிரிழந்ததை அடுத்து, பல தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில குறிப்பிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை மையப்படுத்தியே இந்த மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், சில தலைவர்களுக்கு வீட்டிலேயே இதுபோன்ற பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.